நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

மலாக்கா:

அரசியல் வேறுபாடுகளால் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்படக்கூடாது.

இதனால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

மக்கள் பாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் வேண்டுமென்றே கட்டுப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.

உண்மையில், இன்று நான் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட்டை நேரடியாக மக்களுக்கு வழங்கப் போகிறேன் என்பதை அறிவிக்க விரும்புகிறேன் என்று அவர் கெஅடிலான் தேசிய மாநாட்டில் கூறினார்.

தேசியக் கூட்டணி கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களை தனது நிர்வாகம் ஓரங்கட்டியதாகக் கூறப்படுவதை டத்தோஸ்ரீ அன்வார் மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நிதியுதவியை வழங்கும் தனது முடிவை முன்பு ஏற்காத அம்னோ தலைவர்கள் இருந்ததையும் அவர்  வெளிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset