நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்காளர்கள் பெர்சாமாவை விரும்புகிறார்கள்; ஆனால் அக்கட்சி வெற்றி பெற முடியாது என்று நினைக்கிறார்கள்: ரபிசி

கோலாலம்பூர்:

வாக்காளர்களைத் தங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில் பெர்சாமாவின் மிகப்பெரிய சவால் இல்லை.

மாறாகத் தேர்தலில் வெற்றிபெற கட்சிக்கு வாய்ப்புள்ளது என்று அவர்களை நம்ப வைப்பதில்தான் சவால் உள்ளது என்று அதன் தலைவர் ரபிசி ரம்லி கூறினார்.

சில வாக்காளர்கள் பெர்சாமா முன்வைத்த திட்டங்களை விரும்பினாலும், வலுவான மற்றும் நன்கு நிலைபெற்ற ஒரு அரசியல் கூட்டணிக்கு எதிராக ஒரு புதிய கட்சியை ஆதரிக்கத் தயங்குகிறார்கள்.

அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது கேள்வி அல்ல.

மாறாக எங்களால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதா என்பதுதான் கேள்வி என்று ஷாஆலமில் நடந்த ஒரு பெர்சாமா நிகழ்வில் அவர் கூறினார்.

மேலும் உங்கள் யோசனை எனக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் நீங்கள் மிகவும் புதியவர்.

முதலில் பெரிய கட்சிகள் மோதட்டும் போன்ற கூற்றுகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset