செய்திகள் மலேசியா
20 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் புதிய கிராமங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பினர் என்னை அழைத்துச் சென்றது மறக்க முடியாத ஒன்று: அமைச்சர் முஹம்மது சாபு
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கு குறுகிய கால பயணம் மேற்கொண்டுள்ள உஸ்தாத் நூஹ் மஹ்ளரி, மலேசியாவின் விவசாயம், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மது சாபு அவர்களை சந்தித்துப் பேசினார்.
தாம் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு வந்ததை நினைவுகூர்ந்த அமைச்சர் முஹம்மது சாபு, ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பினர் தனது தென்னிந்திய பயணத்தை ஒருங்கிணைத்தனர் என்றார். அது மறக்க முடியாத, மகிழ்ச்சியான அழைப்பியல் பயணம் என்றார் அவர்.
அப்போது தம்மை இஸ்லாத்தைத் தழுவிய மீனாட்சிபுரம் உட்பட பல புதிய கிராமங்களுக்கு அவர்கள் அழைத்துச் சென்றதை அவர் குறிப்பிட்டு கூறினார்.
தமது கட்சியான அமானாவின் கொள்கைகள் பெரும்பாலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கை கோட்பாடுகள் போன்றவை என்று அவர் கூறினார்.
புதிய கிராமங்களுக்கு மாட் சாபு சென்ற போது அவர்களுடன் மௌலானா காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி, மௌலவி ஜஃபருல்லா ரஹ்மானி, இப்னு சவூத் ஆகியோர் இருந்தனர் என்று அமானா கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் ஹாஜி பஷீர் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:56 pm
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:22 pm
