செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கத்திற்கான ஜசெகவின் ஆதரவு ஒரு வெற்று காசோலை அல்ல: கணபதிராவ்
கிள்ளான்:
மடானி அரசாங்கத்தில் ஜசெக கட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
ஆனால் கட்சியின் ஆதரவை பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு வெற்று காசோலை என்று கருத முடியாது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான் வலியுறுத்தினார்.
ஜசெக வெறுமனே பதவியில் நீடிப்பதற்காகவோ அல்லது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகவோ அரசாங்கத்தில் சேரவில்லை.
மாறாக மக்கள் மாற்றம், சீர்திருத்தம், நீதி, பொறுப்புக்கூறல், சிறந்த நிர்வாகத்திற்காக வாக்களித்ததால் இணைந்தது.
அரசாங்கத்தில் இருப்பது என்பது நாம் கொள்கைகளைக் கைவிடுகிறோம் என்று அர்த்தமல்ல.
மாறாக, அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பது, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உண்மையை எடுத்துரைக்கவும், பொறுப்புக்கூறலைக் கோரவும், சீர்திருத்தத் திட்டங்கள் வெறும் கோஷங்களாக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்யவும் எங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பை அளிக்கிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
அரசாங்கத்திற்கான ஜசெகவின் ஆதரவின் அளவானது. யார் பதவியில் இருக்கிறார்கள் அல்லது அரசியல் உறவுகள் எந்த அளவிற்குப் பேணப்படுகின்றன என்பதைச் சார்ந்திருக்கக் கூடாது.
மாறாக மக்களுக்காக உண்மையிலேயே வெற்றிகரமாக என்ன செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே இருக்க வேண்டும் என்று அவர் விளக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 10:51 pm
கெஅடிலான் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்; தகவல் தொடர்பை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
August 16, 2026, 10:49 pm
நிலைத்தன்மைக்காக அம்னோவுடன் ஒத்துழைக்க வேண்டியதன் யதார்த்தத்தை ஜசெக ஏற்றுக் கொள்கிறது: அந்தோனி லோக்
August 16, 2026, 10:46 pm
