செய்திகள் மலேசியா
எம்எம்ஒய்சியின் 11ஆவது ஆண்டு மீலாதுன் நபி ஊர்வலம்; 5,000 பேர் திரள்வார்கள்: அஸ்ரின், ரிஃபாய் நம்பிக்கை
கோலாலம்பூர்:
எம்எம்ஒய்சியின் 11ஆவது ஆண்டு மீலாதுன் நபி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 5,000 பேர் கலந்து கொள்வார்கள்.
எம்எம்ஒய்சியின் ஆலோசகர் அஸ்ரின், தலைவர் முகமது ரிஃபாய் ஆகியோர் இந்த நம்பிக்கையை தெரிவித்தனர்.
மலேசியாவில் மீலாதுன் நபி ஊர்வலத்தை எம்எம்ஒய்சி அமைப்பு இடைவிடாது நடத்தி வருகிறது.
இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் அவரது நபிமொழிகள், வழிகாட்டுதல்கள், புகழ்மாலைகள், சொற்பொழிவுகள் என்று பலவிதமாக நினைவுகூர்கிறார்கள்
இது நபிகள் நாயகத்தின் மீதுள்ள அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மாதமாகும்.
அவ்வகையில் தான் இந்த ஊர்வலத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
மேலும் இதன் மூலம் இந்திய முஸ்லிம் சமுதாய மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் முதன்மை நோக்கமாகும்.
நாட்டில் உள்ள பல இந்திய முஸ்லிம் அமைப்புகளில் வற்றாத ஆதரவுடன் இந்த ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
ஆக இந்த ஊர்வலம் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அஸ்ரின் கூறினார்.
இந்த ஊர்வலம் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி துன் பேராக், லெபோ அம்பாங், டாங்க் வாங்கி சாலை வழியாக மீண்டும் மஸ்ஜித் இந்தியாவை ஊர்வலம் வந்தடையும்.
போலிசாரின் அனுமதியோடும் டிபிகேஎல்லின் இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆதரவோடு இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எம்எம்ஒய்சி அமைப்பின் தலைவர் முகமது ரிஃபாய் சொன்னார்.
மலேசிய இந்திய முஸ்லிம் பெருமக்கள் அணி திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மஸ்ஜித்கள், மதரஸாக்களின் நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்துகொள்ளும்படியும் வழி நெடுக நபி புகழ்பாடி வரும்படி அன்புடன் அழைப்பதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
