செய்திகள் மலேசியா
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் மீலாதுன் நபி ஊர்வலம்; அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும்: டத்தோ வீரா ஷாகுல்
கோலாலம்பூர்:
அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் மீலாதுன் நபி ஊர்வலம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும்.
முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை வலியுறுத்தினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிறந்த நாள் விழாவை மீலாது நபி விழாவாக உலகெங்கும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.
முஸ்லிம்கள் பெருமானார் (ஸல்) பிறந்த நாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்து, அவரது வாழ்வியல் விழுமியங்களை பின்பற்றுவதன் மூலம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் எம்எம்ஒய்சி ஏற்பாட்டில் இவ்வாண்டு மீலாதுன் நபி ஊர்வலம் தலைநகரில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீலாதுன் நபி ஊர்வலம் இம் மாதம் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கி நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறும்.
எம்எம்ஒய்சி ஏற்பாட்டில் 11ஆவது ஆண்டாக இந்த ஊர்வலம் நடைபெறுகிறது.
இவ்வேளையில் எம்எம்ஒய்சி அமைப்பினருக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்எம்ஒய்சி இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தாலும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமூகமும், இயக்கங்களும் வழமைபோல் இதற்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்.
குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்கள் இந்த ஊர்வலத்தில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளோடு அவரது வாழ்வின் அர்த்தம், மகத்துவம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும்.
இது தான் மீலாதுன் நபி ஊர்வலத்தில் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.
அவ்வகையில் எம்எம்ஃஒய்சியின் இம் முயற்சிக்கு முக்மின் அமைப்பு முழு ஆதரவை தரும் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
