செய்திகள் மலேசியா
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
கோலாலம்பூர்:
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை விநியோகம் இன்று தொடங்கி கட்டங்கட்டமாக வழங்கப்படவுள்ளது என்று மலேசிய நிதியமைச்சு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் 5.3 மில்லியன் மக்கள் இந்த ரஹ்மா உதவித் தொகையைப் பெறுவார்கள் என்றும் இதற்காக மலேசிய நிதியமைச்சு 1.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது தற்போது 300,000 அதிகரித்துள்ளது.
குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர்களில் 3.9 மில்லியன் பேர் இந்த உதவித்தொகையைப் பெறுவார்கள்.
மீதமுள்ள 1.4 மில்லியன் பயனர்கள் ஜோடி இல்லாத முதியவர்கள் ஆவர் என்று நிதியமைச்சு விளக்கம் அளித்தது.
மூன்றாம் கட்ட உதவியாகப் பயனர்களுக்கு அவர்களின் வருமானம் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 150 முதல் 600 ரிங்கிட் வரை வழங்கப்படும்.
அதே வேளையில், ஜோடி இல்லாத முதியவர்களுக்கு இந்த முறை 150 ரிங்கிட் நிதி உதவி வழங்கப்படும்.
இதன் வழியாக மூன்று கட்டங்களுக்கும் சேர்த்து நடப்பாண்டில் வழங்கப்பட்ட மொத்த STR தொகை 3.6 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்தச் சீரமைப்புகளைச் செய்து வருகிறது.
இதற்கேற்ப STR தொகை காலாண்டு முறையிலும், SARA உதவித் தொகை மாதாந்திர அடிப்படையிலும் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
