செய்திகள் மலேசியா
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
ஹங் துவா ஜெயா:
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை தனது மடானி அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாட்டின் முதலாவது அரசாங்கம் சபா, சரவாக்கை உட்படுத்திய MA63 உடன்படிக்கையை தேசிய கொள்கையாக எடுத்துக்கொண்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.
MA63 உடன்படிக்கை என்பது வெறும் சபா, சரவாக் மாநிலத்தை உட்படுத்தியதாக மட்டும் பார்க்கக்கூடாது. மாறாக அது ஒரு தேசிய கொள்கையாக கருத வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தீபகற்பம் மலேசியா என்றும் சபா, சரவாக் மாநிலங்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் காண முடியும் என்று பிகேஆர் கட்சியின் காங்கிரஸ் நேஷனல் மாநாட்டை தொடக்கி வைத்து பிகேஆர் தலைவருமான அன்வார் உரையாற்றினார்.
MA63 கோரிக்கைகளைச் செயல்படுத்துவதில் இன்னும் முன்னேற்றம் காண இடமுள்ளது என்று அன்வர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி
September 5, 2026, 10:42 am
