செய்திகள் மலேசியா
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
கோல கங்சார்:
கோல கங்சாரில் உள்ள லெம்பா ஜெட்டி அருகே பேரா ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை சுமார் 3.12 மணியளவில், உள்ளூர் மலாய் ஆடவர் ஒருவர் ஆற்றில் சடலம் கிடப்பதாக கோல கங்சார் மாவட்ட போலிஸ் தலைமையகத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலி சார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், சடலம் சுமார் 30 வயதுடைய பெண்ணுடையது என்பது தெரியவந்தது.
எனினும், இதுவரை அவரது அடையாளம் உறுதி செய்யப்படவில்லை.
மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருவதாக கோல கங்சார் மாவட்ட போலிஸ் தலைவர். ஹெய்ஷாம் ஹருன் தெரிவித்தார்.
சம்பவத்துக்கான காரணம், பின்னணி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் ஊகங்கள் அல்லது தூண்டுதல் கருத்துகளை வெளியிட வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் கோலா கங்சார் மாவட்ட போலிஸ் தலைமையகத்தை 05-776 2222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் வழங்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:50 pm
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் ரத்து செய்யப்படும்: பிரதமர்
August 15, 2026, 11:59 am
