செய்திகள் மலேசியா
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
குவாந்தான்:
தெமர்லோ-திரியாங் சாலையில் இருவர் உயிரிழந்த சாலை விபத்தில் தொடர்புடைய டேங்கர் லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்போங் லெபாக் அருகே ஜாலான் தெமர்லோ-திரியாங் சாலையின் 9ஆவது கிலோமீட்டரில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், 37 வயதான டேங்கர் லாரி ஓட்டுநர் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெமர்லோ மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முஹம்மத் நசிம் பஹ்ரோன் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-ன் கீழ் அவர் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் போதைப்பொருள் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் முகமட் நசிம் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
