நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரும், ஜாஹித்தும் புகைப்படத்திற்குப் புன்னகைக்கின்றனர்; ஆனால் நம்பிக்கையின் அளவு மிகக் குறைவாக உள்ளது: கைரி

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும், துணைப் பிரதமர் ஜாஹித்தும் புகைப்படத்திற்காக மட்டுமே புன்னகைக்கின்றனர்.

ஆனால் அவர்களிடையே நம்பிக்கையின் அளவு மிகக் குறைவாக உள்ளது என்று அம்னோ முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்தைக் கவிழ்த்த நெகிரி செம்பிலான் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்ற தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி கூட்டணியைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கு இடையேயான உறவு மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நெகிரி செம்பிலானில் ஏற்பட்ட அரசியல் கூட்டணிக்குப் பிறகு ஒரு பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்கும் அம்னோ, தேசிய முன்னணிக்கும் இடையேயான உறவு இதுபோன்று மிகவும் அறைகூவலான சூழ்நிலையில் தொடர்ந்து இருந்தால், 

மடானி அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, பிரதமருக்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித்துக்கும் இடையேயான நம்பிக்கையின் அளவு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது என்பது இரகசியமல்ல என்று நான் நினைக்கிறேன்.

சரி, கேமரா முன் புன்னகைப்பது போன்ற நடிப்பையெல்லாம் ஒருபுறம் வைப்போம். 

ஏனென்றால், டத்தோஸ்ரீ அன்வார், டத்தோஸ்ரீ ஜாஹித் ஆகியோர் அரசியல் நடிப்பில் வல்லுநர்கள் என்பதும், அவர்கள் எதை நல்லதாகக் காட்ட விரும்புகிறார்களோ அதை உலகிற்குக் காட்ட முடியும் என்பதும் நமக்குத் தெரியும் என்று கைரி சுட்டிக் காட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset