நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாபோங் ஹாஜியை தொடர்ந்து பெல்டா தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் அம்பலப்படுத்தும்: பிரதமர்

கோலாலம்பூர்:

தாபோங் ஹாஜி வாரியம் சம்பந்தப்பட்ட முறைகேடுகளைக் கையாண்ட பிறகு, பெல்டா தொடர்பான பிரச்சினைகளை அரசு அம்பலப்படுத்தும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு சமிக்ஞை அளித்துள்ளார்.

சமீபத்தில் தன்னைச் சந்தித்தபோது மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்  இந்த விஷயத்தை வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

மேலும், மக்கள் உரிமை நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விசாரணைகள் தாபோங் ஹாஜியுடன் நின்றுவிடக் கூடாது என்றும் அவர் விரும்பினார்.

தாபோங் ஹாஜியுடன் முடித்துவிடாதீர்கள். தொடருங்கள் என்று கடந்த வாரம் மாமன்னர் என்னிடம் தெரிவித்தார்.

பெல்டாவிற்கு இப்போது யார் பொறுப்பு என்று மாமன்னர் கேட்டார். நான் தான் என்று பதிலளித்தேன்.

தாபோங் ஜாஹிக்கு பிறகு பெல்டாவைக் அம்பலப்படுத்துங்கள் என்று மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கெஅடிலான் 2026 தேசிய மாநாட்டையொட்டி ஆற்றிய தனது கொள்கை உரையில் அதன் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset