நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன இரண்டு எம்ஆர்எஸ்எம் மாணவிகள் சென்ட்ரல் மார்க்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்டனர்: அஸ்ராப்

கோலாலம்பூர்:

அலோர் காஜாவில் உள்ள எம்ஆர்எஸ்எம் கல்லூரியைச் சேர்ந்த, செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு மாணவிகளை, நேற்று இரவு இங்குள்ள சென்ட்ரல் மார்க்கெட்டில் போலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மாராவிம் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராப் வாஜ்தி டுசுகி இதனை தெரிவித்தார்.
சித்தி நூர் ஐரா அய்டி, நூர் ஆஸ்சி ஹுமைரா முஹம்மது சஆத் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டதை அவர் நேற்று நள்ளிரவில் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட எம்ஆர்எஸ்எம்மின் இரண்டு மாணவிகளை புக்கிட் அமான் போலிசார் நேற்று இரவு 10.31 மணியளவில் சென்ட்ரல் மார்கெட் பகுதியில் கண்டுபிடித்ததற்கு இறைவனுக்கு நன்றி என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset