நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடிக்கப்படுவதிலிருந்து சாக்யமுனி பௌத்த ஆன்மீக தியான மையத்தை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்: மஹிமா

கோலாலம்பூர்:

பேரா செமோர், குனோங் காந்தானில் உள்ள நூற்றாண்டு பழமையான சாக்யமுனி பௌத்த ஆன்மீக தியான மையத்தை இடிப்பு, வெளியேற்ற அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற அரசு தலையிட வேண்டும்.

மலேசிய இந்து ஆலய, சங்கங்களின் பேரவையின் (மஹிமா) தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும் என விரும்பும் அம் மையத்தின் நிர்வாகம், துறவிகள், தொடர்புடைய குழுக்களின் வேண்டுகோளை மஹிமா ஆதரிக்கிறது.

குனோங் காந்தன் பகுதியை உள்ளடக்கிய தம்பூன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் டத்தோஸ்ரீ அன்வார் உள்ளார்.

அப் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தின் சிமெண்ட் குவாரி நடவடிக்கைகள் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, சாக்கியமுனி குகைகள் மையத்தை இடிக்கப்படும், வெளியேற்றப்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது.

குனோங் காந்தனில் உள்ள மையத்தையும் அதன் சுற்றுப்புறப் பகுதியையும் தேசிய பாரம்பரிய தளமாக அரசிதழில் வெளியிடுவதற்கான விண்ணப்பத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

அதன் மூலம் அங்குள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த வழிபாட்டுத் தலம், சமய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். 

இதனை எந்த அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாத்துப் பேண வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களையும் குனோங் காந்தன் பகுதியையும் பாதுகாக்கக்கூடிய ஒரு தீர்வைக் காண்பதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset