நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 

குவாந்தான்: 

இன்று அதிகாலையில் பகாங், ரொம்பினில் உள்ள டேசா மாவார் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர். 

ஓர் ஆடவர், அவரின் மனைவி மற்றும் சிறுவனும் ஒருவனும் இந்த தீ விபத்தில் பலியானதாக பகாங் மாநில JBPM அதிகாரி சலாஹுடின் இசா கூறினார். 

தீ விபத்து குறித்து தங்கள் தரப்புக்கு அதிகாலை 4.11 மணிக்குத் தகவல் கிடைத்தது. 

இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீடு முற்றிலுமாக தீயில் அழிந்தது. மற்றொரு குடியிருப்பும் 70 விழுக்காடு வரை சேதமடைந்தன. 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset