செய்திகள் மலேசியா
ரவாங் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத் திட்டம் பள்ளி திடலுக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்படும்: பாப்பா ராய்டு
ரவாங்:
ரவாங் தமிழ்ப்பள்ளியில் ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் திட்டம் மாணவர்கள் பயன்படுத்தி வரும் திடலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் சுமூகமான தீர்வை காண உரிய கருத்துப் பரிமாற்றமும் தக்க ஆலோசனைகளும் முன்னெடுக்கப்படும்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் இதனை உறுதி அளித்தார்.
1.5 மில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கம் காண விருக்கும் வேளையில் அதன் கட்டுமானம் விளையாட்டுத் திடலின் ஒரு பகுதியில் புதிய கட்டிடம் அமைய சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே வேளையில், மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், அவர்களின் விளையாட்டுத் துறை நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளதால் திடலுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று பெற்றோர்கள் மத்தியில் இருந்தும் தற்போது கருத்துக் கணிப்பு முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை இது குறித்த பரிந்துரையை கல்வி அமைச்சு, வீடமைப்பு ஊராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கு கடிதம் வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பழைய கட்டிடத்தைத் தகர்த்து விட்டு, அதே இடத்திலேயே புதிய கட்டடம் உருவாக்கம் காண விருப்பதை நான் பெரிதும் வரவேற்கிறேன்.
அதே வேளையில், பள்ளித் திடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.
மாணவர்களின் பெற்றோர் பக்கம் நின்று இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பாராய்டு உறுதி அளித்தார்.
ரவாங் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் பெருமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு பள்ளிக்கு 80 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டதாகவும்
அதே வேளையில் இம்முறையும் அதே தொகையான 80 ஆயிரம் ரிங்கிட் இவ்வாண்டும் வழங்கப்படுவதாகவும் பாப்பா ராய்டு அறிவிப்பு செய்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
