நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நவ்ரு (Nauru) குடியரசின் அதிபர்  டேவிட் டபிள்யூ. ஆர். அடேங்கை குவாலிட்டாஸ் மருத்துவக் குழுமத் தலைவர் டத்தோ நூருல் அமீன் சந்தித்தார் 

கோலாலம்பூர்:

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவ்ரு (Nauru) குடியரசின் அதிபர் மாண்புமிகு டேவிட் டபிள்யூ. ஆர். அடேங்கை (David W R Adeang) குவாலிட்டாஸ் மருத்துவக் குழுமத் தலைவர் டத்தோ நூருல் அமீன் சந்தித்தார். 

பசிபிக் தீவு நாட்டின் சுகாதார விநியோக அமைப்பை மாற்றியமைக்கவும் வலுப்படுத்தவும் உதவுவதற்காக குவாலிடாஸ் மருத்துவக் குழு அழைக்கப்பட்டபோது சுகாதாரத் துறையில் மலேசியாவின் நிபுணத்துவம் நவோரோ குடியரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

அந்நாட்டின் சுகாதாரச் சேவை அமைப்பைச் சீரமைத்து மறுசீரமைப்பு செய்வதற்கு உதவவே இச் சந்திப்பு நடைபெற்றது என்று டத்தோ நூருல் அமீன்.

இறைவன் நாடினால் எங்களது அனுபவத்தையும் ஆற்றலையும் கொண்டு அந்த நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு எங்கள் சேவையை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று குவாலிட்டாஸ் மருத்துவக் குழுமத் தலைவர் டத்தோ நூருல் அமீன் தெரிவித்தார். 

டாக்டர் அமீன் மேலும் கூறுகையில், இந்த முயற்சி மலேசியாவுக்கு சர்வதேச அளவில் சுகாதாரத் துறையில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவை வலுப்படுத்துவதற்கு உதவும் என்றார் அவர்.

நாட்டின் சுகாதார அமைப்பு மாற்ற முயற்சிகளை செயல்படுத்த உதவும் குழுவில் சேர நிபுணர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, குவாலிடாஸ் மருத்துவக் குழு மலேசியாவின் நிபுணத்துவத்தை நவோரோவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த ஒத்துழைப்பு கொண்டுள்ளன.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset