நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களில் மாலை 4 மணி வரை கனமழையும் சூரைக்காற்றும் வீசும் 

ஷா ஆலாம்: 

கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் இன்று மாலை 4 மணிவரை இடியுடன் கூடிய கனமழையும் சூரைக்காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த மோசமான வானிலை நாட்டின் மேலும் சில மாநிலங்களிலும் தீவிரமடையக்கூடும் என்று அத்துறை தெரிவித்துள்ளது.

பேராக், கிளந்தான் மாநிலங்களின் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக் மாநிலத்தில் பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பாத்தாங் பாடாங், முஆலிம், மஞ்சோங், பேராக் தெங்கா, கோலா கங்சார், கிந்தா மற்றும் கம்பார் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்.

கிளந்தான் மாநிலத்தில் கோத்தா பாரு, பாச்சோக் மற்றும் தும்பாட் ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு நீடிக்கும் சாத்தியம் இருக்கும்போதே இத்தகைய இடி மின்னல் எச்சரிக்கை பிறப்பிக்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்களின் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை உடனடியாகத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset