நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாபோங்  ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை; வெளிநாட்டு தடயவியல் நிபுணர்களை நியமிப்பது குறித்து எம்ஏசிசி பரிசீலித்து வருகிறது: அப்துல் ஹலிம்

கூச்சிங்:

தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் எழுப்பப்பட்ட சிக்கல்கள் குறித்த விசாரணையில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக, எம்ஏசிசி வெளிநாட்டு தடயவியல் நிபுணர்கள் உட்பட மேலும் பல விசாரணை அதிகாரிகளை நியமிக்க உள்ளது.

இதில் ஒரு வெளிநாட்டு அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதால், செலவுகளைப் பொறுத்து, வெளிநாட்டு தடயவியல் நிபுணர்களின் நியமனம் குறித்து தலைமையகத்தின் உயர் மட்டத்தில் இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் ஹலீம் அமான் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் விரிவானவை என்பதாலும், பெறப்பட்ட ஒவ்வொரு ஆவணத்தையும் ஆதாரத்தையும் ஆய்வு செய்வதற்கு சிறப்பு கவனம், நிபுணத்துவம், பொறுமை தேவைப்படுவதாலும் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset