நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆங் சான் சூகிக்கு எதிராக மேலும் 5 ஊழல் வழக்குகள்

யாங்கூன்:

மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராக அந்த நாட்டு ராணுவ அரசு மேலும் 5 ஊழல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது ஏற்கெனவே 5 ஊழல் வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், அவர் மீது புதிதாக 5 ஊழல் குற்றச்சாட்டுகளை ராணுவ ஆட்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஆங் சான் சூகிக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி, அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset