செய்திகள் மலேசியா
நாட்டின் விமான நிலைய பாதுகாப்பினை வலுப்படுத்தும் திட்டம்: அடுத்த அமைச்சரவவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள விமான நிலைய பாதுகாப்பினை வலுப்படுத்தும் திட்டம் தொடர்பாக வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும்
இந்த தகவலை நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
25 கிலோ போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 39 வயதான அந்த மலேசிய விமானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் ஒருங்கிணைப்பு, பயிற்சி, உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் ஸ்கேனிங் இயந்திரங்களின் செயல்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரம் குறித்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் எடுத்துரைத்த வேளையில், விமான நிலையப் பாதுகாப்பிற்கு அனைத்துத் தரப்பும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்
கடந்த ஜூலை 29-ஆம் தேதி இந்தோனேசியாவின் சோகர்னோ-ஹாட்டா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-இல் அந்த மலேசிய விமானி அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கடத்தப்பட்ட போதைப்பொருளின் அளவு அதிகம் என்பதால், இந்தச் சம்பவம் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2026, 5:30 pm
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த பர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 12, 2026, 5:28 pm
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க மாநில DAP ஒருமனதாக முடிவு
August 12, 2026, 4:43 pm
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி முதியவரை கொலை செய்த கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 12, 2026, 4:00 pm
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து சீனா நாட்டவர்கள் கைது
August 12, 2026, 3:59 pm
சக நாட்டைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த ஆடவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 12, 2026, 3:42 pm
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு
August 12, 2026, 12:53 pm
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்: துணைவியார் வான் அஸிஸா தகவல்
August 12, 2026, 12:24 pm
