செய்திகள் மலேசியா
பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகிய வோங் சென் பெர்சாமா கட்சியில் இணைந்தார்
சுபாங் ஜெயா:
சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய வோங் சென் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமா கட்சியில் இணைந்துள்ளார்.
பெர்சாமா கட்சியின் தலைவர் ரஃபிசி ரம்லி இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
பி.கே.ஆர் கட்சியில் ஏறக்குறைய இரு தசாப்தங்களாகச் சேவை ஆற்றிய வோங் சென், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியாவார்.
தாம் எதிர்காலத்தில் கட்சியிலிருந்து விலகக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர் ஏற்கனவே சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ரஃபிசி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மட் ஆகிய இருவரும் பெர்சாமா கட்சிக்கு தலைமை தாங்குவதற்காகத் தங்களின் நாடாளுமன்ற இடங்களைத் துறந்தனர்.
அவர்களின் அந்த முடிவைத் தொடர்ந்தே வோங் சென்னும் பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகும் முடிவை மேற்கொண்டுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2026, 5:30 pm
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த பர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 12, 2026, 5:28 pm
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க மாநில DAP ஒருமனதாக முடிவு
August 12, 2026, 4:43 pm
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி முதியவரை கொலை செய்த கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 12, 2026, 4:00 pm
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து சீனா நாட்டவர்கள் கைது
August 12, 2026, 3:59 pm
சக நாட்டைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த ஆடவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 12, 2026, 3:42 pm
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு
August 12, 2026, 12:53 pm
