செய்திகள் மலேசியா
கெடா, சுங்கை மெர்போக் சதுப்புநிலக் காடு, குப்பைக் கொட்டும் இடமாக திகழ்கிறது: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை
சுங்கை பட்டாணி
கெடாவில் உள்ள சுங்கை மெர்போக் நிரந்தரப் பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலக் காட்டில் திடக்கழிவுகள் கொட்டப்படும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண, சுங்கை பட்டாணி நகராட்சி மன்றத்தையும் , வனத்துறையையும் உடனடியாக விசாரணை நடத்தி, விரைவான அமலாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துவதாக அதன் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
சுங்கை மெர்போக் நெடுகிலும் பி.ப.சங்கம் நடத்திய ஆய்வில், காம்போங் செகந்தாங் காரம் பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகளில் பெரும்பாலானவை நெகிழிப் பைகள், நெகிழித் தண்ணீர்ப் புட்டிகள் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்சினை, பலமுறை எழுப்பப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தீர்க்கப்படவில்லை என்பது குறித்து பி.ப.சங்கம் வருத்தம் தெரிவிக்கிறது என முஹைதீன் கூறினார்.
சுங்கை மெர்போக் சதுப்புநிலக் காடு, அதன் ஆற்றுச் சூழல் அமைப்பைச் சீரழிப்பதைத் தவிர, நெகிழி கழிவு மாசுபாடு அருகிலுள்ள கடலுக்குப் பரவி, கடலோரப் பகுதிகளை அசுத்தப்படுத்துவதோடு, இந்த நீரைத் தங்கள் வருமானத்திற்காக நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்களின் செயல்பாடுகளுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது குறித்தும் பி.ப.சங்கம் கவலை கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர அனுமதிக்கப்பட்டால், அது எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதியிலும் அதன் சுற்றியுள்ள சூழல் அமைப்பிலும் இன்னும் கடுமையான சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறது.
சுங்கை மெர்போக், அதன் சதுப்புநிலக் காடுகளை எந்தவொரு மாசுபாட்டிலிருந்தும் பாதுகாக்க, உள்ளாட்சி அமைப்பும் தொடர்புடைய முகமைகளும் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
குடியிருப்பாளர்கள் தங்கள் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த ஏதுவாக, உள்ளாட்சி அமைப்பு போதுமான எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகளை வழங்க வேண்டும் மற்றும் அப்பகுதி முழுவதும் குப்பை கொட்டுவதைத் தடைசெய்யும் கூடுதல் அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும்.
மனித நலனில் நெகிழிகள், நெகிழி கழிவுகள், பிற கழிவுகளால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசாங்கம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்று பி.ப.சங்கம் பரிந்துரைக்கிறது என முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 12, 2026, 5:30 pm
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த பர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 12, 2026, 5:28 pm
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க மாநில DAP ஒருமனதாக முடிவு
August 12, 2026, 4:43 pm
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி முதியவரை கொலை செய்த கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 12, 2026, 4:00 pm
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து சீனா நாட்டவர்கள் கைது
August 12, 2026, 3:59 pm
சக நாட்டைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த ஆடவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 12, 2026, 3:42 pm
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு
August 12, 2026, 12:53 pm
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்: துணைவியார் வான் அஸிஸா தகவல்
August 12, 2026, 12:24 pm
