நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சக நாட்டைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த ஆடவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது 

போர்டிக்சன்: 

வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் தனது மூன்று சக நாட்டவர்களைக் கொலை செய்ததாக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 

கொலை வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்டதால் பிரதிவாதி முஹம்மது இட்ரிஸ் அலியிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. 

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் 4.15 மணிக்குள் தாமான் லிங்கியில் ஒருவரையும், சுவா மாங்கிஸ் எண்ணெய்ப் பனைத் தோட்டத்தில் இருவரையும் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்தவர்கள் 44 வயதுடைய ஒருவரும், 40 மற்றும் 52 வயதுடைய இரு சக நாட்டுத் தொழிலாளர்களும் ஆவர்.

இக்குற்றச்சாட்டுகள் குற்றவியல் சட்டப்பிரிவு 302-இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளன.

இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 12 கசையடிகளும் விதிக்கப்படலாம்.

மலேசியாவில் ஒன்பது ஆண்டுகளாக வசித்து வரும் பிரதிவாதிக்கு பிணை எதுவும் வழங்கப்பட மாட்டாது என அரசுத் தரப்பு தெரிவித்தது.

குற்றச்சாட்டுகள் தமக்கு புரியவில்லை என பிரதிவாதி கூறியதைத் தொடர்ந்து, மொழிபெயர்ப்பாளர் மூலம் குற்றச்சாட்டுகளை மீண்டும் வாசிப்பதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset