செய்திகள் மலேசியா
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து சீனா நாட்டவர்கள் கைது
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர் கும்பலை காவல்துறை முறியடித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 38 முதல் 58 வயதுடைய ஐந்து சீனா நாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செராஸ் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் பிடிபட்டனர்.
ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் புடு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுமார் RM6,000 மதிப்பிலான இழப்பைச் சந்தித்திருந்தார்.
இதில் ரொக்கப் பணம், நகைகள் மற்றும் விலை உயர்ந்த கைப்பை ஆகியவை திருடப்பட்டதாகக் கூறப்பட்டது.
இவர்கள் செராஸ் பகுதியில் பதிவான மேலும் இரு வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்பு கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10 முதல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் 457-வது பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2026, 5:30 pm
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த பர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 12, 2026, 5:28 pm
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க மாநில DAP ஒருமனதாக முடிவு
August 12, 2026, 4:43 pm
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி முதியவரை கொலை செய்த கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 12, 2026, 3:59 pm
சக நாட்டைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த ஆடவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 12, 2026, 3:42 pm
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு
August 12, 2026, 12:53 pm
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்: துணைவியார் வான் அஸிஸா தகவல்
August 12, 2026, 12:24 pm
