நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்: துணைவியார் வான் அஸிஸா தகவல் 

கோலாலம்பூர்: 

நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று அவரின் துணைவியார் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். 

இந்நிலையில் பிரதமர் அன்வார் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் தமது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். 

நாட்டின் பல தரப்பிலிருந்தும் கிடைத்த அன்பும் ஆதரவும் மருத்துவமனைச் சிகிச்சையின் போது அவருக்குப் பெரும் தெம்பை அளித்துள்ளதாகக் கூறப்பட்டது.

முன்னதாக, பண்டார் துன் ரசாக்கில் நடைபெற்ற செமாராக் மெர்டேக்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு டத்தோஶ்ரீ வான் அஸிஸா செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார். 

பிரதமர் அன்வார் இப்ராஹிம் வயிற்றுப் பிரச்சனைக்குச் சிகிச்சைப் பெறுவதற்காக திங்கள்கிழமை அன்று திட்டமிடப்பட்ட லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சீரான உடற்பயிற்சி மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர் பூரண குணமடைந்து வருகிறார்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset