நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த பர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் 

மூவார்: 

கடந்த மே மாதம் 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்ததாக  24 வயதுடைய பர்கர் விற்பனையாளர் அகில் யூசுப் என்பவர் இன்று மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில்  குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

நீதிபதி எமெலியா கஸ்வாதி காலித் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசித்துக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை 

கடந்த மே 29-ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில், ஜோகூர், தங்காக் பகுதி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைத்து அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அகில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டம் பிரிவு 376(1)-இன் கீழ் சுமத்தப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வழக்கறிஞர் எவரும் இல்லாமல் ஆஜரான அகிலுக்கு நீதிமன்றம் RM8,000 பிணைத்தொகை வழங்கியதுடன், மாதந்தோறும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட செஷன்ஸ் நீதிமன்ற மறுவிசாரணை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset