செய்திகள் மலேசியா
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி முதியவரை கொலை செய்த கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா:
கடந்த வாரம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் உயர்க்கல்வி மாணவர் மீது தெலுக் டத்தோ மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் மஸ்லிண்டா செலாமாட் முன்னிலையில் 23 வயதான என். விஷ்வேஷ் மீது இக்கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாகக் கூறிய பிரதிவாதியிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கொலை வழக்குகள் உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குற்றச்சாட்டின்படி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை 7.20 மணியளவில் கோலா லங்காட், கிள்ளான்-பந்திங்-போர்ட் டிக்சன் சாலையில் 78 வயதான எங் கிம் கெங் என்பவரைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
குற்றவியல் சட்டக் பிரிவு 302-இன் கீழ் அவர் மீது இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 12 கசையடிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது..
மேலும் இவ்வழக்கின் மறு விசாரணைக்காக வரும் அக்டோபர் 1-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2026, 5:30 pm
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த பர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 12, 2026, 5:28 pm
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க மாநில DAP ஒருமனதாக முடிவு
August 12, 2026, 4:00 pm
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து சீனா நாட்டவர்கள் கைது
August 12, 2026, 3:59 pm
சக நாட்டைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த ஆடவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 12, 2026, 3:42 pm
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு
August 12, 2026, 12:53 pm
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்: துணைவியார் வான் அஸிஸா தகவல்
August 12, 2026, 12:24 pm
