செய்திகள் மலேசியா
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க மாநில DAP ஒருமனதாக முடிவு
ஈப்போ:
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க மாநில DAP ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசாங்கத்தில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கட்சியின் அனைத்து இயந்திரங்களும் முழுமையாக பணியாற்றும் என்று பேராக் DAP ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
கடந்த மூன்றாண்டு கால ஆட்சியில் பிரதமர் அன்வாரின் தலைமைத்துவம் பல சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி நாட்டின் சர்வதேசப் புகழை உயர்த்தியுள்ளது.
மக்களுக்காக ஆற்றப்படும் பணிகள் மற்றும் சாதனைகள் மூலம் கட்சியின் திறனைத் தொடர்ந்து நிரூபிப்பது மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் இருக்க அவசியமாகும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அரசாங்கத்தில் நீடிப்பதன் மூலம் நிறுவனச் சீர்திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பக்கத்தான் ஹராப்பனின் தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர முடியும்.
மேலும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும், மக்களின் நலனுக்காக நாட்டின் வளர்ச்சியை முடக்கிவிடும் தீவிரவாத சக்திகளைத் தடுக்கும் பொருட்டு இந்த பதவிக்காலத்தில் சீர்திருத்தங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான DAP தேசிய மாநாட்டிற்கு முன்னதாக இந்த நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2026, 5:30 pm
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த பர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 12, 2026, 4:43 pm
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி முதியவரை கொலை செய்த கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 12, 2026, 4:00 pm
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து சீனா நாட்டவர்கள் கைது
August 12, 2026, 3:59 pm
சக நாட்டைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த ஆடவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 12, 2026, 3:42 pm
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு
August 12, 2026, 12:53 pm
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்: துணைவியார் வான் அஸிஸா தகவல்
August 12, 2026, 12:24 pm
