நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு 

பெட்டாலிங் ஜெயா: 

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலுக்குப் பிறகு பெர்சாமா கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரஃபிசி ரம்லி கூறினார். 

தற்போது பெர்சாமா கட்சியில் சுமார் 29,200 உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாதவர்கள் என்றும் கட்சியின் தலைவர் ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.

கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 60 சதவீதத்தினர் இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்காத புதியவர்கள் ஆவர்.

அன்றாடம் பெறப்படும் உறுப்பினர் விண்ணப்பங்களில் இத்தகைய புதியவர்களின் பங்களிப்பே பெரும்பான்மையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாக்கத்தான் ஹரப்பான் தோல்வியடைந்த பின்னரே, பெர்சாமா கட்சியில் சேர விண்ணப்பங்கள் பெருமளவில் குவிந்தன.

மேலும், கடந்த வாரம் வரையிலான தரவுகளின்படி, பெர்சாமா உறுப்பினர்களில் 25 சதவீதத்தினர் பிகேஆர் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset