செய்திகள் விளையாட்டு
ரொனால்டோ, ஜார்ஜினாவின் திருமணம் போர்த்துகலில் நடைபெற்றது
லிஸ்பன்:
கால்பந்து நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது துணைவியார் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும், நேற்று போர்த்துகலில் உள்ள கஸ்காய்ஸ் என்ற சுற்றுலாத் தலத்தில் நடந்த விழாவில் திருமணம் செய்து கொண்டதாக அந்த வீரரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
41 வயதான ரொனால்டோ, திருமண மோதிரங்கள் அணிந்த தம்பதியரின் கைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அத்தம்பதியரின் ஐந்து பிள்ளைகளும் விழாவில் கலந்துகொண்டனர் என, அந்த வீரரின் மக்கள் தொடர்பு நிறுவனமான பிரன்ஸ்விக் குரூப், ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
சமூக ஊடகப் பிரபலமாகவும் விளங்கும் 32 வயதான ரோட்ரிக்ஸ், இன்ஸ்டாகிராமில் தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்துச் சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு, இந்தத் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
2016இல் மாட்ரிட்டில் உள்ள ஒரு கடையில் ரோட்ரிக்ஸ் பணிபுரிந்தபோது அவர்கள் சந்தித்தனர்.
அந்த சந்திப்பை ரோட்ரிக்ஸ் முதல் பார்வையிலேயே காதல் என்று வர்ணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்
September 4, 2026, 10:00 am
மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா சிறப்பு மரியாதையை செலுத்துகிறது
September 3, 2026, 9:33 am
வீரர்கள் பரிமாற்ற சாதனையை மென்செஸ்டர் சிட்டி முறியடித்தது
September 3, 2026, 9:28 am
கடத்தல் சதித்திட்டத்தின் 26 முக்கிய நபர் இலக்குகளில் கிளையன் எம்பாப்பேவும் ஒருவர்
September 2, 2026, 8:35 am
பெர்னாண்டஸை 682.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது
September 2, 2026, 8:32 am
மெஸ்ஸியின் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: பெக்காம்
September 1, 2026, 12:34 pm
ஒலிம்பிக் போட்டியில் அஸிசூல்ஹஸ்னி தங்கம் வெல்வார்: இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு நம்பிக்கை
September 1, 2026, 10:42 am
