செய்திகள் விளையாட்டு
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
ஜூரிச்:
அடுத்த ஆண்டு மொராக்கோவில் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.
பிபா தலைவராக தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்திருந்தார்.
இதனால் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வேல்ஸ் நாட்டின் கால்பந்து சங்கம் அவருக்கான ஆதவை திரும்பப் பெற்றது.
இந்த நிலையில், மூன்று முக்கிய கூட்டமைப்புகள் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளன.
பிபா தொடர்புடைய நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஜியானி இன்ஃபான்டினோவுக்கு எதிராக மூன்று முக்கிய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளன.
ஐரோப்பா, வட, மத்திய அமெரிக்கா, ஆசியா ஆகிய வட்டாரங்களின் கால்பந்து கூட்டமைப்புகள் இணைந்து வெளியிட்ட கடிதம் ஒன்றில், கால்பந்து விளையாட்டு எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல.
கால்பந்து விளையாட்டில் தலைமைத்துவம் என்பது ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல.
அது அதிகாரத்தைத் தன்வசம் வைத்திருப்பதோ அல்லது அதிகாரத்தைக் கோருவதோ அல்ல.
ஏமாற்று வேலைகளால் நம்பிக்கை சிதைக்கப்படும்போதும், தனக்கு அதிகாரத்தை வழங்கிய ஒட்டுமொத்த அமைப்பைக் காட்டிலும் ஒரு தனிநபர் தன்னை உயர்ந்தவராகக் கருதும்போதும், அந்தப் பொறுப்பு கைவிடப்பட்டதாகவே அர்த்தம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
