நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்

ரோசாரியோ:

என் வாழ்வில் ஒரு முக்கிய நபர் மறைந்து விட்டார் என்று அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உருக்கமாக கூறினார்.

புற்றுநோயுடன் போராடி நேற்று தனது 68-ஆவது வயதில் காலமான தந்தை ஜார்ஜ்க்கு மெஸ்ஸி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஜார்ஜ், சிறுவயது முதலே மெஸ்ஸியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக விளங்கினார்.

ஒரு தந்தையாக மட்டுமல்லாமல், மெஸ்ஸி உலகக் கால்பந்தின் ஜாம்பவான்களில் ஒருவராக உருவெடுக்கும் வரை அவரது வாழ்க்கையை நிர்வகித்த ஒரு முகவராகவும் பின்புலமாகவும் அவர் திகழ்ந்தார்.

எட்டு முறை பலோன் டி'ஓர் விருது வென்றவர், தனது மனைவி அன்டோனெலா ரொக்குசோ, அவர்களது குழந்தைகளுடன் சனிக்கிழமையன்று மியாமியிலிருந்து ஒரு தனி விமானத்தில் ரொசாரியோ வந்தடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, ரொசாரியோவிற்கு அருகிலுள்ள பெரெஸ் நகரில் உள்ள ஒரு கல்லறையில், அவரது நெருங்கிய குடும்பத்தினர், அர்ஜெண்டினா அணியின் சில சக வீரர்கள் கலந்துகொண்ட ஒரு தனிப்பட்ட இறுதிச் சடங்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset