நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜொகூர் டாருல் தக்ஸிம் vs செல்சி அணிக்களுக்கிடையிலான நட்புமுறை காற்பந்து ஆட்டம்: இதுவரை 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் டாருல் தக்ஸிம், செல்சி அணிகளுக்கு இடையிலான நட்புமுறை காற்பந்து ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன 

லண்டன் கிளப்பின் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணி ஜொகூரில்  விளையாடுவதைக் காண விரும்புகிறார்கள் என்பதை இந்த எண்ணிக்கை நிரூபிக்கிறது.

தொடர்ந்து 12 சீசன்களாக சூப்பர் லீக் சாம்பியனாக இருந்துவரும் அணி, உலக கிளப் சாம்பியன்களை எதிர்கொள்வதைக் காண JDT ரசிகர்கள் நிச்சயம் உற்சாகமடைவார்கள்.

நாளை ஜொகூரில் உள்ள இஸ்கண்டார் புத்ரியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் காற்பந்து மைதானத்தில் இந்த நட்புமுறை காற்பந்தாட்ட போட்டி நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset