நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை

இஸ்கண்டார் புத்ரி:

அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் செல்சி - ஜேடிதி அணிகள் சமநிலை கண்டனர்.

இங்கிலாந்தின் லீக் போட்டிகள் ஆரம்பமாகும் பட்சத்தில் அதில் பங்கேற்கும் கிளப்புகள் அனைத்துலக நட்புமுறை ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றன.

இதன் அடிப்படையில் செல்சி அணியினர் சிறப்பு பயணமாக ஜொகூருக்கு வந்தனர்.

இங்கு ஜேடிதி அணியுடனான நட்புமுறை ஆட்டத்திலும் செல்சி அணியினர் மோதினர்.

இவ்வாட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் செல்சி அணியுடன் சமநிலை கண்டனர்.

செல்சியா அணியுடன் 3-3 என்ற கணக்கில் சமநிலை செய்து, அவர்களின் அகந்தையை ஜேடிதி அணி கிட்டத்தட்ட தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset