செய்திகள் விளையாட்டு
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
கோலாலம்பூர்:
2026 ஆசியான் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு ஹரிமாவ் மலாயா அணி முன்னேறியது.
கோலாலம்பூர் கால்பந்து அரங்கில் நடைபெற்ற 'பி' பிரிவின் இறுதி ஆட்டத்தில் பிலிப்பைன்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், ஹரிமாவ் மலாயா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியின் மூலம், தான் செங் ஹோ தலைமையிலான அணி ஒன்பது புள்ளிகளைப் பெற்று, பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பேங்காக்கில் மியான்மரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய, பிரிவு சாம்பியனான தாய்லாந்தை விட மூன்று புள்ளிகள் பின்தங்கியுள்ளது.
ஆகஸ்ட் 16, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், நடப்பு சாம்பியனான வியட்நாமை எதிர்கொள்ளும்போது தேசிய அணிக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது.
அதே நேரத்தில், தாய்லாந்து அணி ஏ பிரிவின் இரண்டாம் இடத்தைப் பிடித்த சிங்கப்பூரை எதிர்கொள்ளும்.
முன்னதாக மலேசிய அணியின் வெற்றி கோலை ஆட்டத்தில் 16ஆவது நிமிடத்தில் பவித்திரன் குணாளன் அடித்தார்.
இதன் மூலம் ஹரிமாவ் மலாயா அணியின் தனது திறனை அவர் நிரூபித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
October 14, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
October 13, 2026, 10:09 am
கடினமான காலங்களை மென்செஸ்டர் யுனைடெட் சமாளிக்கும்: மைக்கல் கேரிக்
October 13, 2026, 10:05 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 12, 2026, 9:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 11, 2026, 9:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
October 11, 2026, 9:06 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 10, 2026, 10:09 am
முன்னாள் லிவர்பூல் கோல்காவலர் காரியஸ் குடும்பத்தினருக்கு மரண அச்சுறுத்தல்கள்
October 10, 2026, 10:08 am
மென்செஸ்டர் சிட்டியின் நிதி வழக்கை மதிக்க வேண்டும்: அர்தெத்தா
October 9, 2026, 9:09 am
