செய்திகள் விளையாட்டு
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
குவாந்தான் -
சிலாங்கூர் 2026 சுக்மா விளையாட்டு போட்டியில் 35 தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கு பகாங் அணிக்கு சாத்தியமானதே.
பகாங் சுக்மா அணியின் தலைவர் கைசுல்நிசாம் முஹம்மது சுல்தின் இதனை கூறினார்.
சுக்மா விளையாட்டு போட்டி வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை சிலாங்கூரில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் 35 தங்கப்பதக்கங்களை வெல்ல பகாங் அணி இலக்கு கொண்டுள்ளது.
வீரர்கள் பங்கேற்ற பல்வேறு சாம்பியன் சுற்றுகளில் பெற்ற முடிவுகள், அவர்களின் தீவிரப் பயிற்சி உள்ளிட்ட தற்போதைய செயல்திறனின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்தவரை, 35 தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கு சாத்தியமானதே.
ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுக்மா சரவாக் போட்டியில் பங்கேற்றது உட்பட, பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு அனுபவம் உள்ளது.
எனவே, அந்த இலக்கை அடைவதில் தற்போது தங்களின் சிறந்த நிலையில் இருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களின் உயர் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அது அமைந்தால், அதை அடைவது சாத்தியமற்றது அல்ல என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
