செய்திகள் மலேசியா
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
காஜாங்:
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் மேம்பாட்டு பணிகளுக்காக இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக காஜாங் நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலம் வரை அப்பகுதியில் பொதுமக்களின் நுழைவுக்கும் பயன்பாட்டிற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த மூடல் அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு செயல்படுமாறு நிர்வாகத்தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இக்காலக்கட்டத்தில் மைதான வளாகத்தில் எவ்விதச் சமூக அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாண்டுக்கான சிலாங்கூர் மாநில அளவிலான மெர்டேக்கா தின கொண்டாட்டம் டத்தாரான் காஜாங் சதுக்கத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது
அந்நிகழ்வை முன்னிட்டு மைதானத்தைச் சீரமைக்கும் பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்துத் பராமரிப்புப் பணிகளும் திட்டமிட்டபடி நிறைவடைந்தவுடன் ஆகஸ்ட் 26-க்குப் பின் காஜாங் மைதானம் மீண்டும் திறக்கப்படும்.
அதுவரையில் பொதுமக்கள் நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பை நல்கி மாற்று இடங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
