செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி RCI அறிக்கையை விவாதிக்காமல் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு: டாக்டர் சலெஹா முஸ்தஃபா கடும் கண்டனம்
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜியின் RCI அரச விசாரணை அறிக்கை குறித்து விவாதம் மேற்கொள்ள சிறப்பு மக்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சி தரப்பு விவாதத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது
இதற்கு பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சலெஹா முஸ்தஃபா கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரின் இந்த நடவடிக்கை வெறும் அரசியல் நாடகம் என்றும், முறையான விவாதங்களைத் தவிர்க்கும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதாக உரிமை கோரும் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்கு, இந்த விவகாரத்தில் போதிய நேர்மை இல்லை என்று அவர் சாடினார்.
RCI அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து கேள்வி எழுப்பவும் விவாதிக்கவும் நாடாளுமன்றம் வாய்ப்பளித்த போதிலும், எதிர்க்கட்சியினர் அதனைப் பயன்படுத்தாமல் வெளிநடப்பு செய்யத் தேர்வு செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் முதன்மை நிதியத்தின் நிர்வாகம் தொடர்பான இந்த விவகாரத்தில் அரசியல் சாகசங்களைச் செய்வதற்கான சரியான நேரம் இதுவல்ல என்றும் அவர் கண்டித்தார்.
முன்னதாக, தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கையின் விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி தரப்பு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டது
இருப்பினும், சபாநாயகர் எதிர்க்கட்சியின் கோரிக்கையை நிராகரித்தனர். இதனால் அவையிலிருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதில் கலந்துகொள்ள முடியாததால், இக்கூட்டத்தை வேறொரு தேதியில் நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
