நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்

போனஸ் அயர்ஸ்:

2020-ல் தனது மரணத்திற்கு முந்தைய இறுதி நாட்களில், டியாகோ மரடோனா படுக்கையில் வீக்கத்தால் அவதிப்பட்டு, தனது தலைவிதியை ஏற்றுக்கொண்டது போல் காணப்பட்டார்.

அந்த அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவானின் மசாஜ் செய்பவர் இன்று நீதிமன்றத்தில் இவ்வாறு சாட்சியமளித்தார்.

மரடோனா படுக்கையை விட்டு எழ விரும்பவில்லை, சாப்பிட மறுத்தார், குளிக்க விரும்பவில்லை.

மேலும் தனது தனிப்பட்ட சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவும் விரும்பவில்லை என்று நிக்கோலஸ் டஃபாரெல் தனது சாட்சியத்தில் கூறினார்.

நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்ட ஒலிப்பதிவுகளின்படி, 1986 உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் வீரரான மரடோனாவை இன்னும் நெருக்கமாகக் கண்காணிக்கவும், அவரைத் தினமும் சந்திக்கவும் அவரது மருத்துவக் குழுவை எச்சரித்ததாக அவர் கூறியுள்ளார்.

அந்த கால்பந்து ஜாம்பவானின் மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடிய அலட்சியம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், ஏழு சுகாதாரப் பணியாளர்கள் மீது ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து அர்ஜெண்டினாவில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset