செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு அதிகாரி; மந்திரி புசாரிடம் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு அதிகாரிக்கான பெயர்கள் மந்திரி புசாரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் தலைமையில் நெகிரி செம்பிலானில் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது.
இந்நிலை மரியாதை நிமிர்த்தமாக இன்று அவரை நான் சந்தித்தேன்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் என்னுடன் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார்.
இச்சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
குறிப்பாக நெகிரி செம்பிலான் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஆட்சிக் குழு உறுப்பினர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என மந்திரி புசார் அறிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்தும் மந்திரி புசாரிடம் விவாதிக்கப்பட்டது.
அப்போது இரண்டு, மூன்று பெயர்கள் அப்பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த சிறப்பு அதிகாரியை மந்திரி புசார் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலன் உட்பட அனைத்து விவகாரங்களுக்கும் இந்த அதிகாரி பொறுப்பேற்க உள்ளார்.
இதனால் தகுதியானவரை மந்திரி புசார் தேர்வு செய்து அறிவிப்பார் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 3:49 pm
மாணவரை அறைந்த ஆசிரியர் RM 88,069 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
August 10, 2026, 3:15 pm
பெட்ரோல் நிலையத்தில் கத்தியை வீசிய ஆடவருக்கு நான்கு நாட்கள் தடுப்பு காவல் விதிப்பு
August 10, 2026, 2:29 pm
நெகிரி செம்பிலானில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரி உயர்த்தப்படாது: இஸ்மாயில் லசிம்
August 10, 2026, 2:03 pm
நெகிரி செம்பிலான் ஜசெகவின் புதிய தலைவராக அருள்குமார் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 10, 2026, 1:11 pm
கோலாலம்பூர் காற்பந்து மைதானத்திற்கு வெளியே நிகழ்ந்த கைகலப்பு: போலிஸ் விசாரணை
August 10, 2026, 12:58 pm
