நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தகர்களின் நலனுக்காக மாநில அரசாங்கத்துடன் வர்த்தக சபை இணைந்து செயல்படும்: திருநாவுக்கரசு

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தகர்களின் நலனுக்காக மாநில அரசாங்கத்துடன் வர்த்தக சபை இணைந்து செயல்படும்.

நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு இதனை கூறினார்.

நெகிரி செம்பிலானில் டத்தோ இஸ்மாயில் லசிம் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது.

இவ்வேளையில் அவருக்கும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் இன்று மரியாதை நிமித்தமாக ஒரு சில ஆட்சிக் குழு உறுப்பினர்களை நாங்கள் சந்தித்தோம்.

இதில் விவசாயம், உணவு பாதுகாப்பு, வாழ்க்கை செலவினத் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ முஹம்மது ராஸியை முதன்மையாக சந்தித்தோம்

அவரைத் தொடர்ந்து சுகாதாரம், ஒருமைப்பாடு, தகவல் தொடர்பு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் சுஹாய்மிசான் பிசார், வீடமைப்பு, ஊடாட்சி, இஸ்லாம் அல்லாதவர்களின் ஆட்சிக் குழு உறுப்பினர் சியோ கோங் சூன் ஆகியோரையும் சந்தித்தோம்.

இவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

அதில் நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தகர்களின் நலன் திட்டங்கள் முன்னிலை வகித்தன என்று திருநாவுக்கரசு கூறினார்.

இன்றைய சந்திப்பில் நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் துணைத் தலைவர் கருடா சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset