நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் காற்பந்து மைதானத்திற்கு வெளியே நிகழ்ந்த கைகலப்பு: போலிஸ் விசாரணை 

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் காற்பந்து மைதானத்திற்கு ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் போலிஸ் விசாரணை நடத்தி வருவதாக செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் துணை ஆணையர், முஹம்மத் ரொஸ்டி தவுத் கூறினார். 

இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த கைகலப்பில் உள்ளூர் ஆடவர் ஒருவர் காயங்களுக்கு இலக்கானதாக அவர் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட நபருக்கு வயது 20இல் இருப்பார் என்றும் இது குறித்து போலிஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், கைகலப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்று முஹம்மத் ரொஸ்டி கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, 2026 ஆசியான் கிண்ண காற்பந்து போட்டி மலேசியா- பிலிப்பைன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது. 

மைதானத்திற்கு வெளியே பதற்றமான சூழல் ஏற்பட்டு பின்னர் கைகலப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset