செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் ஜசெகவின் புதிய தலைவராக அருள்குமார் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் ஜசெகவின் புதிய தலைவராக நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள்குமார் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அம்மாநில ஜசெக தலைவராகப் பொறுப்பு வகித்த கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அந்தோனி லோக் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைவராக அருள்குமார் பொறுப்பேற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற மாநில ஜசெக குழுக் கூட்டத்தில் இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
மாநிலக் குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் சீன இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், தலைவராக அருள்குமாரையே தேர்வு செய்துள்ளனர்.
அருள்குமாரின் இந்தத் தேர்வு, ஜசெக அனைத்து இன மக்களுக்குமான கட்சி என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது என்று அந்தோனி லோக் கூறினார்.
நடைபெற்று முடிந்த நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் நீலாய் தொகுதியில் போட்டியிட்ட அருள்குமார் 5,937 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 3:49 pm
மாணவரை அறைந்த ஆசிரியர் RM 88,069 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
August 10, 2026, 3:15 pm
பெட்ரோல் நிலையத்தில் கத்தியை வீசிய ஆடவருக்கு நான்கு நாட்கள் தடுப்பு காவல் விதிப்பு
August 10, 2026, 2:29 pm
நெகிரி செம்பிலானில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரி உயர்த்தப்படாது: இஸ்மாயில் லசிம்
August 10, 2026, 1:11 pm
கோலாலம்பூர் காற்பந்து மைதானத்திற்கு வெளியே நிகழ்ந்த கைகலப்பு: போலிஸ் விசாரணை
August 10, 2026, 12:58 pm
