செய்திகள் மலேசியா
பெட்ரோல் நிலையத்தில் கத்தியை வீசிய ஆடவருக்கு நான்கு நாட்கள் தடுப்பு காவல் விதிப்பு
கோலா திரெங்கானு:
பெட்ரோல் நிலையத்தில் ஓர் உணவு விநியோகிப்பாளரை நோக்கி இறைச்சி வெட்டும் கத்தியை வீசிய ஆடவருக்கு எதிராக இன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நேற்று ஜாலான் பாசிர் பஞ்சாங்கில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ந்தது
55 வயதுடைய சந்தேக நபருக்கு எதிராக தடுப்பு காவல் விதிக்கப்பட்டதுடன் இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 506இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது
சந்தேக நபர் நேற்றிரவு 10 மணிக்கு கோலா திரெங்கானுவில் உள்ள தனது இல்லத்தில் கைது செய்யப்பட்டார் என்று கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர், அஸ்லி முஹம்மத் நோர் கூறினார்.
பெட்ரோல் நிரப்பும்போது தாமதமாக செயல்பட்டதால் அதிருப்தி அடைந்த சந்தேக நபர் இந்த குற்றத்தைப் புரிந்ததாக தெரிகிறது
சந்தேக நபருக்கு எதிராக 15 குற்றப்பின்னணி பதிவுகள் இருப்பதை காவல்துறை கண்டறிந்தது
முன்னதாக, உணவு விநியோகிப்பாளர் மீது கத்தியை வீசும் சம்பவம் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 3:49 pm
மாணவரை அறைந்த ஆசிரியர் RM 88,069 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
August 10, 2026, 2:29 pm
நெகிரி செம்பிலானில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரி உயர்த்தப்படாது: இஸ்மாயில் லசிம்
August 10, 2026, 2:03 pm
