செய்திகள் மலேசியா
மாணவரை அறைந்த ஆசிரியர் RM 88,069 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
கோத்தா பாரு:
கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு மாணவரை நான்கு முறை அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தில் ஓய்வுப்பெற்ற இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் RM 88,069 ரிங்கிட் இழப்பீடு வழங்க கோத்தா பாரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
தனது தாயின் மூலமாக 21 வயதான அடாம் மைதீன் எனும் அந்த மாணவர், வரலாறு பாட ஆசிரியரான 63 வயது இசமுடின் இஸ்மாயிலுக்கு எதிராக முதல் பிரதிவாதியாகவும் மேலும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகவும், தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அனுமதித்த பின்னர், நீதிபதி ரோஸ்லி யூசோஃப் இந்த முடிவை எடுத்தார்.
மாணவனின் கன்னத்திலும் முகத்திலும் ஆசிரியர் அந்த குற்றத்தைப் புரிந்ததாக நீதிபதி குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவர் காது வலியால் அவதியுற்றதாகவும் காது கேட்கும் பரிசோதனையை மேற்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு கல்வியாளர் என்ற முறையில், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு மாணவர்களிடம் கவனமாக நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது,
கடுமையாக அறைந்ததால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு செவித்திறன் சிக்கல் ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டு மருத்துவ குறிப்பில் இது குறிப்பிடப்பட்டிருந்தது
நீதிமன்றம் உத்தரவிட்ட RM88,069 தொகையில், பொது இழப்பீடாக RM45,000, சிறப்பு இழப்பீடாக RM569, முன்மாதிரி இழப்பீடாக RM11,250 மற்றும் கடுமையான இழப்பீடாக RM11,250 ஆகியவை அடங்கும் என்றும், இவற்றுடன் RM20,000 வட்டி மற்றும் வழக்குச் செலவுகளும் அடங்கும் என்றும் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 3:15 pm
பெட்ரோல் நிலையத்தில் கத்தியை வீசிய ஆடவருக்கு நான்கு நாட்கள் தடுப்பு காவல் விதிப்பு
August 10, 2026, 2:29 pm
நெகிரி செம்பிலானில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரி உயர்த்தப்படாது: இஸ்மாயில் லசிம்
August 10, 2026, 2:03 pm
