செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மஇகாவின் கண்காணிப்பு அதிகாரியாக டத்தோஸ்ரீ சரவணன் நியமனம்; சீர்த்திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மஇகாவின் கண்காணிப்பு அதிகாரியாக துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாநில மஇகாவில் சீர்த்திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மஇகா இரு இடங்களில் போட்டியிட்டது.
கடும் சவால்களுக்கு மத்தியில் இரு தொகுதிகளிலும் மஇகா தோல்வி கண்டது.
இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இருந்தாலும் அத்தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் பல ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வருகின்றனர்.
இதனால் அவர்களை தவிர்த்து விட்டு மஇகா வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் எந்த நியாயமும் இல்லை.
அதே வேளையில் இறுதி நேரத்தில் தான் எங்களுக்கு இவ்விரு தொகுதிகளும் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டன.
இப்படி பல விவகாரங்களும் மஇகாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளன.
இதையும் தாண்டி கட்சிக்கும் நிலவும் ஒரு சில பிரச்சினைகளும் மஇகாவின் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஒருவர் வேட்பாளராக நியமிக்கும் போது அனைவரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். அவரின் வெற்றிக்கு பாடுப்பட வேண்டும்.
ஆனால் இங்கு நிலைமை வேறாக உள்ளது. இதுவும் மஇகாவின் தோல்விக்கான காரனமாக உள்ளது.
இதன் அடிப்படையில் தான் நெகிரி செம்பிலான் மஇகாவின் கண்காணிப்பு அதிகாரியாக டத்தோஸ்ரீ சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் தலைமையில் மாநில மஇகாவில் சீர்த்திருத்த பணிகள் அதிரடியாக மேற்கொள்ளப்படும்.
இது கட்சிக்கு உருமாற்றத்தையும் மேம்பாட்டையும் கொடுக்கும் குறிப்பாக கட்சி மேலும் வலுப் பெறும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 3:49 pm
மாணவரை அறைந்த ஆசிரியர் RM 88,069 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
August 10, 2026, 3:15 pm
பெட்ரோல் நிலையத்தில் கத்தியை வீசிய ஆடவருக்கு நான்கு நாட்கள் தடுப்பு காவல் விதிப்பு
August 10, 2026, 2:29 pm
நெகிரி செம்பிலானில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரி உயர்த்தப்படாது: இஸ்மாயில் லசிம்
August 10, 2026, 2:03 pm
