நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு அதிகாரி; அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார்: மந்திரி புசார்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு அதிகாரி அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார்.

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலானில் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து முதல் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக சிறப்பு சட்டமன்றக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மாநில சட்டமன்றத்தின் சபா நாயகர், துணை சபாநாயகர் பதவியேற்கவுள்ளது.

மிகவும் முக்கியமான இவ்விரு பதவிகளுக்கும் தகுதியானவர் யார் என்பது குறித்து நீண்ட விவாதத்திற்கு பி. முடிவு செய்யப்படும்.

அதே வேளையில் நெகிரி செம்பிலான் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஆட்சிக் குழு உறுப்பினர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என கடந்த வாரம் அறிவித்திருந்திருந்தேன்.

இந்த சிறப்பு அதிகாரியும் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார்.

ஆட்சிக் குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பின் டத்தோ இஸ்மாயில் லசிம் இவ்வாறு கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset