செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரி உயர்த்தப்படாது: இஸ்மாயில் லசிம்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் அரசாங்கம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்துள்ளது.
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் இதனை கூறினார்.
புதிய நிர்வாகத்தின் அமர்வுக்காக இன்று நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஜூலையில் செயல்படுத்தப்படவிருந்த நுழைவுக்கட்டண உயர்வு குறித்து வீட்டுவசதி, ஊராட்சித் துறை அமைச்சு முன்னதாக ஒரு ஆய்வை நடத்தி வந்தபோதிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரிய எந்த உயர்வும் இருக்காது என மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும் என்று இன்று விஸ்மா நெகிரி செம்பிலானில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
வீட்டு வரி என்பது வீட்டு உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டிய ஒரு கட்டணம் என்பதால், மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக நுழைவுக் கட்டண விகிதம் உயர்த்தப்படாததால், அதன் உயர்வு குறித்து முன்னரே ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 3:49 pm
மாணவரை அறைந்த ஆசிரியர் RM 88,069 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
August 10, 2026, 3:15 pm
பெட்ரோல் நிலையத்தில் கத்தியை வீசிய ஆடவருக்கு நான்கு நாட்கள் தடுப்பு காவல் விதிப்பு
August 10, 2026, 2:03 pm
நெகிரி செம்பிலான் ஜசெகவின் புதிய தலைவராக அருள்குமார் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 10, 2026, 1:11 pm
கோலாலம்பூர் காற்பந்து மைதானத்திற்கு வெளியே நிகழ்ந்த கைகலப்பு: போலிஸ் விசாரணை
August 10, 2026, 12:58 pm
