நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவு துறையின் சின்னத்தை வாகனத்தில் பயன்படுத்திய பாகிஸ்தான் நாட்டு ஆடவர் கைது

புத்ராஜெயா: 

குடிநுழைவு துறையின் சின்னத்தில் வாகனத்தில் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து குடிநுழைவு துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 

அந்நிய நாட்டவர் ஒருவர் பயன்படுத்தும் வாகனத்தில் குடிநுழைவு துறையின் சின்னம் பயன்படுத்தப்படுவது குறித்து வீடியோ பதிவை தொடர்ந்து நேற்று சந்தேக நபர் கைதானார் 

இந்த தகவலை குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபன் உறுதிப்படுத்தினார். 

சம்பந்தப்பட்ட வீடியோ பதிவானது 2025 ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது என்றும் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி சந்தேக நபரின் மனைவி தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் சொன்னார். 

1966 கடப்பிதழ் சட்டத்தின் செக்‌ஷன் 12(1)(f)), 1959/63 குடிநுழைவு சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். 

வாகன ஓட்டுநர் குடிநுழைவு துறை சின்னத்தையும் அதன் சிக்னல் விளக்குகளையும் எந்தவொரு  நோக்கமும் இன்றி தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பொருத்தியதை ஒப்புக்கொண்டதோடு, அந்தச் செயல் சட்டப்படி ஒரு குற்றம் என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset